வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
X

வாணியம்பாடியில் வாட்ஸ் அப்பில் மதுபானம் விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு அமைத்து கள்ளசாராயம், மதுபானம் விற்றவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்டஆட்சியர் உத்தரவு

கொரோனா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் வாணியம்பாடியில் பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், சரவணன் ஆகியோர் வாட்ஸ்அப் குழு அமைத்து குழுவில் மதுபானம், சாராயம் கேட்பவர்களுக்கு குறிபிட்ட இடத்திற்கு வரவழைத்து வெளிமாநில மதுபானம், கள்ளசாரயம் விற்பனை செய்து வந்தனர். வாட்ஸ்அப் குழு குறித்து தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வாட்ஸ்அப் குழு அட்மின் ஜனார்த்தன், சரவணன் ஆகிய 2 பேரை கடந்த மாதம் கைது சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜனார்த்தனன் மீது வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலைமுயற்சி, கள்ளசாராயம், மதுபானம் விற்பனை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி பரிந்துரையில் பேரில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஜனார்த்தனனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சியர் உத்தரவையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள ஜனார்த்தன் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!