/* */

நீர் வழிதடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்: அமைச்சர் வேலு

தமிழகத்தில் நீர் வழி தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆம்பூரில் அமைச்சர்வேலு பேட்டி

HIGHLIGHTS

நீர் வழிதடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்: அமைச்சர் வேலு
X

தற்காலிக சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வேலு 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மழை நீர் சூழ்ந்து உள்ளதை பார்வையிட்ட அமைச்சர் வேலு, பின்னர் தமிழக ஆந்திரா செல்லும் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதால், தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆம்பூர் அடுத்த இந்திராநகர் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டபின், வடபுதுப்பட்டு பகுதியில் விவசாய நிலத்தில் சேதமடைந்த பயிர்களை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது, நீர் வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்திருந்தால் இது போன்ற நீர் ஊருக்குள் வராது. தமிழகத்தில் நீர் வழி தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

வாணியம்பாடி அருகே நெடுஞ்சாலைக்கு சொந்தமான வெளிதிமானிக பெண்டா மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவசர காலமாக இது முதல் பணியாக எடுத்துக்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். ஆம்பூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியின் போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 20 Nov 2021 5:20 PM GMT

Related News