கலந்திரா ஊராட்சியில் விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
X
கலந்திரா ஊராட்சியில் வயலில் சிக்கிய மலைப்பாம்பு
By - Venkateswaran, Reporter |23 Jan 2022 7:26 PM IST
வாணியம்பாடி அருகே கலந்திரா ஊராட்சியில் விவசாய நிலத்தில் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் கலந்திரா ஊராட்சி அடுத்த கினிக்கிட்டி வட்டம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி புரியும் ராஜு என்பவருக்கு சொந்தமாக ன விவசாய நிலம் உள்ளது .
விவசாய நிலத்தில் கால்வாய் சரிசெய்து கொண்டிருக்கும் போது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த அவர்கள் . உடனடியாக திருப்பத்தூர் வனச்சரகர் பிரபுவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த அண்ணாமலை மற்றும் கிருஷ்ணன் ஆகியோர ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu