திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
X

மழை பெய்ததால் பாலாற்றில் ஓடும் வெள்ளம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. அதே நேரத்தில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக தற்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான புல்லூர் ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பி, தற்பொழுது பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக இரு கரைகளையும் தொட்டவாறு பாலாற்று வெள்ளநீர் செல்கிறது.

மேலும் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ள அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளதால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்லக்கூடிய பொதுமக்களுக்கு வருவாய்த் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனது.

அதே நேரத்தில் பாலாற்றில் வரக்கூடிய தண்ணீரை ஏரிகளுக்கு செல்வதற்கான கால்வாய்களை அரசு முறையாக தூர் வராததால் ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருக்கிறது. மேலும் ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை பாலாற்றின் குறுக்கே கட்டி இருந்தாலும் கூட தற்போது தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கனமழை காரணமாக தடைகளை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் போர்கால அடிப்படையில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை தமிழக அரசு கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாலாற்றில் வெள்ளத்தை ஆர்வத்துடன் பார்த்து செல்லுக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!