வாணியம்பாடியில் வெள்ளபெருக்கு: சி.எல்.சாலை தரைப்பாலம் மூழ்கியது -போக்குவரத்துக்கு தடை

வாணியம்பாடியில் வெள்ளபெருக்கு: சி.எல்.சாலை தரைப்பாலம் மூழ்கியது -போக்குவரத்துக்கு தடை
X

வாணியம்பாடி பிரதான சாலையான சி.எல்.சாலை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. 

பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளபெருக்கால் வாணியம்பாடி பிரதான சாலையான சி.எல்.சாலை தரைப்பாலம் நீரில் மூழ்கியது, போக்குவரத்துக்கு தடை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றின் கிளை ஆறுகளான பெரியபேட்டை கிளை ஆறு மற்றும் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள கிளை ஆற்றில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடர் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியம்பாடி பிரதான சாலையான சி.எல்.சாலை உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் தரை பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் ஏற்படாத முன்பு இந்த கிளை ஆறுகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளதால் தற்போது வெள்ளம் ஏற்பட்டவுடன் கிளை ஆறுகள் குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் தண்ணீர் செல்ல முடியாத தொல்லை இருந்தது, உடனடியாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளுக்கு இதனை உடனடியாக சீர் செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு கிளை ஆறுகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!