/* */

வாணியம்பாடி பாலாற்றில் மீண்டும் வெள்ளம்: விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சி

நீர் வரத்து அதிகரிப்பால், 25 ஆண்டுகளுக்கு பிறகு பேத்தமங்கலம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் தமிழக ஆந்திரா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் கன மழையால் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலம் மற்றும் ராமசாகர் எரி நிரம்பி உள்ளதால் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன

இதன் காரணமாக தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் புல்லூர் என்ற இடத்தில் ஆந்திரா அரசு கட்டி உள்ள தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் தண்ணீர் வருவதால் ஆவாரங்குப்பம், அம்பலூர் பகுதிகளில் உள்ள பாலாற்று வழியாக கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக வெள்ளம் பாய்ந்தோடுகிறது

பாலாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 600 ஏரிகள் உள்ளன. இதில் 350 க்கும் மேற்பட்ட ஏரிகள் பாலாற்று படுகையில் அமைந்துள்ளது. அதில் 315 ஏரிகள் பொது பணித்துறை பராமரிப்பில் உள்ளது. பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது.

மணல் கொள்ளையால் ஆறு பள்ளமாகவும் ஏரிகள் மேடாக உள்ளது. இதனால் சில ஏரிகள் பாலாற்றில் வெள்ளம் வந்தும் நிரம்பாத நிலை உள்ளது. இதனால் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி ஏரிகளுக்கு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேத்தமங்கலம் ஏரி திறந்து விட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பாலாற்று படுகையில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் பஞ்சம் தீரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 16 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!