வாணியம்பாடியில் மின்கம்பத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது

மின்பம்பத்தில் பற்றி எரியும் தீ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன அந்த தெருவில் உள்ள மின் கம்பம் ஒன்று திடீரென மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி வீடுகளுக்கு செல்லக்கூடிய மின் வயர்களில் தீ பரவியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்ல கூடிய மின் இணைப்பு முழுவதும் எரிந்தது.
மேலும் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்
பின்னர் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தில் இருந்து அப்பகுதி வீடுகளில் சொல்லக்கூடிய மின் இணைப்புகள் தீயில் கருகியதால். அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu