வாணியம்பாடி அருகே விவசாயிகள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே விவசாயிகள் சாலை மறியல்
X

வாணியம்பாடி அருகே பாலாற்று தரை பாலத்தின் மீது மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

பாலாற்றில் இருந்து பாசன கால்வாயை மணல் கொள்ளையர்கள் சேதப்படுத்தியதை கண்டித்து யதாக குற்றச்சாட்டு விவசாயிகள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கடந்த 2 மாத காலமாக தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. இதனால் கொடையாஞ்சி பாலாற்று பகுதியில் செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாயை மணல் கொள்ளையர்களால் தொடர்ந்து சேதப்படுத்தபடுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அம்பலூர்- எக்லாசபுரம் செல்லும் பாலாற்று தரை பாலத்தின் மீது விவசாயிகள் மண்வெட்டி கடப்பாரை போன்ற விவசாயத்திற்கு பயன்படும் பொருட்களை கொண்டு அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த அம்பலூர் காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது விவசாயிகள் சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையின் வாகனத்தில் ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் மணல் கொள்ளையை தடுப்பதாகவும், மேலும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அம்பலூரில் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
Weight Loss Tips In Tamil