வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி மனு
வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரசந்தை பகுதியில் இயங்கிவரும் உழவர் சந்தை இந்த சந்தையில் வாணியம்பாடி சுற்றியுள்ள நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, ஆலங்காயம், பூங்குளம், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வாணியம்பாடி உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் உழவர் சந்தை மூடப்பட்டன இந்த நிலையில் தற்காலிக சந்தையாக வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டன, மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவிக்கப்பட்டுள்ளன
விவசாயிகள் விளையும் பொருட்களை விற்பனை செய்ய எடுத்துச் செல்லும் பொழுது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எனவே மீண்டும் உழவர் சந்தை திறந்து வைக்க வேண்டும் எனவும், அதே பகுதியில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu