ரஜினிகாந்த் 72வது பிறந்தநாள்: ரசிகர்கள்  கோவில்களில் சிறப்பு வழிபாடு

ரஜினிகாந்த்  72வது பிறந்தநாள்: ரசிகர்கள்  கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

வாணியம்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள்  சிறப்பு வழிபாடு நடத்தி  அன்னதானம் வழங்கினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ஜி. கணபதி தலைமையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில், செட்டியப்பனுர் சாய்பாபா கோவில் கோவில் மற்றும் புதூர் பகுதியில் உள்ள பெத்லகேம் தேவாலயங்களில் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் இருக்க வேண்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிராத்தனைகள் நடத்தி அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

இதில் சேதுராமன், மணியரசு,சக்தி, சுரேஷ்,பாபு, சரவணன் உள்ளிட்ட ரஜினி ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!