வாணியம்பாடி அருகே 103 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த பறக்கும் படை

வாணியம்பாடி அருகே 103 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல்  செய்த பறக்கும் படை
X

வாகன சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகளுடன் ராஜேந்திரன்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 103 ஜெலட்டின் குச்சிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக திருப்பத்தூர் கொடுவாம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் 103 ஜெலட்டின் குச்சிகளை மூட்டை கட்டி கொண்டு சென்றது தெரியவந்தது.


ஜெலட்டின் குச்சிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதால், அதை பறிமுதல் செய்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான குழுவினர் ஒப்படைத்துள்ளனர்

இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!