வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு

வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி  ரயில் மோதி உயிரிழப்பு
X

ரயில் மோதியதால் உயிரிழந்த மூதாட்டி மகாலெட்சுமி

வாணியம்பாடியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமி (வயது 80) இவர் தனது உறவினர் வீடான நியூடவுன் பகுதிக்கு ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக சென்றுள்ளார்

அப்போது நியூடவுன் ரயில்வேகேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சோதனை ஓட்டத்திற்காக சென்ற ரயில் மூதாட்டி மகாலட்சுமி மீது மோதியதில் மூதாட்டி மகாலட்சுமி தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த வந்து சடலத்தை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
ai in future agriculture