வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செக்குமேடு பகுதியில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் இல்லத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்து மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் தற்காலிகமாக உள்ள சட்டமன்ற அலுவலகம் முன்பு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் கிரிராஜ் மற்றும் திமுகவினர் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!