உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
X

ஆலங்காயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம். ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்..

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிவேல், ஆலங்காயம் முன்னால் ஒன்றிய செயலாளர் அசோகன், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!