வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்
X

பைல் படம்

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார்.

இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது. கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

வேர்கள் அறக் கட்டளை தலைவர் வடிவேலு சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் முதற்கட்டமாக புன்னை, மாமரம், நாவல், பாதாம், புங்கன், மயில்கொன்றை, மகோகனி, தென்னை, வேங்கை உட்பட 600 மரக்கன்றுகள் நடபட்டது. இதில் சப்-கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india