உதயேந்திரம் பேரூராட்சி பற்றிய ஒரு கண்ணோட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி பற்றிய ஒரு கண்ணோட்டம்
X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பேரூராட்சி தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்தது

உதயேந்திரம் பேரூராட்சி திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்

இப்பேரூராட்சி அருகில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சிகள் அமைந்துள்ளது. வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50% பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 30% பேர் வேளாண்மை செய்கின்றனர்.

தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் நீரும், நிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு நிலமும் நீரும் கெட்டுப்போயுள்ளது.

எனவே புதிதாக பொறுப்பேற்கும் பேரூராட்சி தலைவர், நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

இந்த தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

எஸ்சி பெண்கள் வார்டு எண் 3, 10, 15

எஸ்சி வார்டு எண் 4, 9

பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண் 2, 5, 6, 8, 13

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil