வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது
X

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் போர்க்கால அடிப்படையில் வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் குளம் குட்டைகள் நிரம்பி அதனுடைய உபரி நீர் மற்றும் மழைநீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை முழுவதும் வெள்ள நீர் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது

இந்த வெள்ள நீரானது அரசு மருத்துவமனையை சுற்றிலும் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசரத் தேவைக்குக் கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. மேலும் விபத்து ஏற்பட்டிருந்தாலோ அல்லது மழையின் காரணமாக நடக்கக்கூடிய விபத்தினால் படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

நீர் நிலைகள் செல்லக்கூடிய கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி உள்ளதால் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வெள்ளநீர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story