திருப்பத்தூர் மாவட்டத்தில் கலையிழந்து காணப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழா

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலையிழந்து காணப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழா
X

கோவில் பூட்டியிருப்பதால் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்யும் மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை விதிப்பால் ஆடிப்பெருக்கு திருவிழா கலையிழந்து காணப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலையிழந்து காணப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழா. கோவில்கள் பூட்டி இருந்ததால் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்த பொதுமக்கள்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றானது தற்பொழுது மூன்றாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி, திருப்பத்தூர் அருகே இருக்கக்கூடிய பசிலிகுட்டை, ஜலகாம்பாறை, மற்றும் ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் ஆடிப்பெருக்கு விழாவுக்கு மக்கள் கூடுவதை தவிர்க்க பண்டிகை கொண்டாட தடை விதித்திருந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நடைபெறாத நிலையில் கிராமமக்கள் ஒரு சிலர் பாலாற்றில் புனித நீராடி அருகில் இருக்கும் கோயில்களின் வெளிப்புறத்திலிருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!