வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் கொரோனா பரிசோதனை

வாணியம்பாடியில் மக்கள் கூடும் இடங்களிலும் நகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது

தற்போது பொதுமக்கள் பரிசோதனை முன்வராததால் மக்கள் கூடும் இடங்களான காய்கறி சந்தை, பூக்கடை பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து முகாமிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் கொரோனா ஸ்வாப் டெஸ்ட் மேற்கொள்கிறார்கள்

இதில் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இது மக்கள் மத்தியில் எளிமையான பரிசோதனையாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து செல்கின்றனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2 மணி நேரத்தில் பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
ai marketing future