லாரி உரிமையாளர் அடித்து கொன்ற கணவன் மனைவி ஓசூரில் கைது

லாரி உரிமையாளர் அடித்து கொன்ற கணவன் மனைவி ஓசூரில் கைது
X

லாரி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் கைதான தம்பதியினர்

வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்க சென்ற லாரி உரிமையாளர் அடித்து கொலை தலைமறைவான கணவன் மனைவி ஓசூரில் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் வெங்கடேசன் 3 லாரிகளை வைத்து தொழில் நடத்தி வருகிறார் இவர் சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்

பல ஆண்டுகளாக சங்கர் பணம் திருப்பித் தராததால் நேற்று சின்ன வேப்பம்பட்டு பகுதியில் உள்ள சங்கர் வீட்டுக்குச் சென்ற வெங்கடேசன் பணத்தை கேட்டு சங்கரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது பின்னர் வீட்டின் அருகாமையில் இருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு சங்கர் வெங்கடேசன் தலையில் தாக்கியுள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த வெங்கடேசன் உயிருக்கு போராடி இருந்த நிலையில் அங்கிருந்து சங்கர் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி இருவரும் தப்பி சென்றுள்ளனர்

பின்னர் உயிருக்கு போராடி இருந்த வெங்கடேசனை அப்பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்தனர் உடனடியா ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்

இது குறித்து வெங்கடேசனின் தந்தை கோவிந்தசாமி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் தப்பியோடிய சங்கர் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை தேடி வந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பிச் செல்வதற்காக ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது வாணியம்பாடி காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!