வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் நிவாரண உதவி, மளிகை பொருட்கள் வழங்கும் பணி

வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் நிவாரண உதவி,  மளிகை பொருட்கள் வழங்கும் பணி
X
வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் கொரோனா நிவாரண உதவி தொகை, ரூ 2000, 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணி துவக்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.‌ தற்போது இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 509 ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகின்றன

இன்று வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, ஜாப்பரபாத், சிக்கினான்குப்பம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் 14வகையான மளிகை பொருட்கள் வழங்கினர்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார், ராமநாயக்கன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசு மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அதனை தொடர்ந்து, ஜோலார்பேட்டையிலும் இரண்டாவது தவணை நிவாரண உதவி மற்றும் மளிகைபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!