ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: வட்டாட்சியர் பங்கேற்பு

ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: வட்டாட்சியர் பங்கேற்பு
X

கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

லங்காயம் பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் தலைமையில் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு வாரம் துவக்கி வைக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் அவர்களின் தலைமையில் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு வாரம் துவக்கி வைக்கப்பட்டது.

பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலங்கயம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் வட்டாடர மருத்துவ அலுவலர் பசுபதி காவல்துறை உதவி ஆய்வாளர் நாகபூஷணம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai future project