வாணியம்பாடி சிறைத்துறை சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்கள்

வாணியம்பாடி சிறைத்துறை சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்கள்
X

வாணியம்பாடி சிறைத்துறை காவலர்கள் சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்களை வழங்கப்பட்டது  

வாணியம்பாடி சிறைத்துறை காவலர்கள் சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்களை வழங்கி கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிறை துறை காவலர்கள் சார்பாக இருசக்கர வாகனத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறைக்கவலர்கள் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பாதகைகளுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.

பேரணியை வாணியம்பாடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சையத் அமிர் (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது. பேரணி வாணியம்பாடி கிளைச் சிறையில் இருந்து கச்சேரி சாலை, வாரசந்தை காய்கறி மார்க்கெட், வரையில் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்றது.

பேரணியின் போது பொதுமக்களுக்கு முகக்கவசம், சனிடைசர், கையுறைகள் வழங்கப்பட்டு முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் சிறைத் துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா