வாணியம்பாடி கொலை வழக்கு: குற்றவாளிகள் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்

வாணியம்பாடி கொலை வழக்கு: குற்றவாளிகள்  வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்
X

குற்றவாளிகளை  கோர்ட்டுக்கு போலீசார் கொண்டுவந்தனர்

வாணியம்பாடியில் கொலை வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 குற்றவாளிகள்  வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கடந்த 10 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குமார், செல்வகுமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், அஜய் ஆகிய 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வீர சேகர் உடன் சென்று நீதிமன்ற நடுவர் பாரதி முன்பு சரணடைந்தனர். அதைதொடர்ந்து அவர்களை 7 நாள் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கும்பகோணம் சிறையில் 6 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் இன்று வாணியம்பாடி காவல்துறையினர் கும்பகோணம் சிறையில் இருந்த குற்றவாளிகள் 6 பேரை வாணியம்பாடி அழைத்து வந்தனர். இதனால் வாணியம்பாடியில் காலை முதலே திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் மீண்டும் அடுத்த மாதம் 4 தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் வாணியம்பாடி காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உள்ளனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!