வாணியம்பாடி அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநருக்கு லேசான காயம்

வாணியம்பாடி அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநருக்கு லேசான காயம்
X

விபத்துக்குள்ளான லாரி

வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 1 லட்சம் மதிப்பிலான கேபிள் உதிரிபாகங்கள் உடைந்து சேதம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி கேபிள் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் நாகராஜ் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் நாகராஜ் காயங்களுடன் உயிர் தப்பினார் கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1 லட்சம் மதிப்பிலான கேபிள் உதிரிபாகங்கள் உடைந்து நாசமானது. இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!