வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அலோசனை கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன், நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, டி.எஸ்.பி பழனி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள், மாடுகள் விற்பனை மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வது குறித்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஆகியோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அதிக அளவில் கூட்டமாக சேர்வதை தவிர்க்க வேண்டுமெனவும், ஆடு மாடுகள் விற்பனை அரசு அறிவித்துள்ள விதிகளை பின்பற்றி அந்தப் பகுதிகளில் செயல்பட வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இதற்காக ஆற்றுமேடு பகுதி மற்றும் பெரியபேட்டை கிளையாறு அருகே இரண்டு இடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிக அளவில் கூட்டம் சேராமல் பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆலோசனை கூட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture