வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்.

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய சோனியா காந்தி அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்குகள் முன்பு தமிழக சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கொரோனா காலகட்டம் என்பதால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!