வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X
வாணியம்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் காங்கிரஸ் கட்சி மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் வாணியம்பாடி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற பேரணி ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல்.சாலை, பேருந்து நிலையம் வழியாக முடிந்தது இதில் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரியும் பிரதமர் மோடி அவர்கள் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story