ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் இடம் குறித்து கலெக்டர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன, இவற்றில் ஒன்று மட்டுமே சொந்த கட்டிடத்தில் இயங்குகின்றது, மற்ற இரண்டும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகாலமாக வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கோரி வருகின்றனர், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் ஏற்கனவே உள்ள நீதிமன்ற அருகே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார், அப்போது வழக்கறிஞர் சங்கத் தலைவர் பூபதி உள்ளிட்டோர் மக்களின் நலனுக்காகவும், வழக்கறிஞர்கள், மற்றும் அரசுத்துறை நலனுக்காகவும், இதே இடத்தில் நீதிமன்றம் அமைக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தாசில்தார் மோகன், நில அளவையர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu