தமிழக ஆந்திரா எல்லை மலைச்சாலை பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தமிழக ஆந்திரா எல்லை மலைச்சாலை பகுதியில்  மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

மலைப்பாதை சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா பகுதிக்கு செல்லக்கூடிய மலைச்சாலையை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா பகுதியை இணைக்கும் மலைச்சாலை தொடர் மழையின் போது கடந்த மாதம் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து தற்காலிக சாலை அமைக்கப்பட்டன. இந்த நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெலதிகமானிபெண்டா மலைப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன், நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் வனத்துறை அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story
ai future project