வாணியம்பாடியில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம் கலெக்டர் அதிரடி

வாணியம்பாடியில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம்  கலெக்டர் அதிரடி
X

வாணியம்பாடி உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வாணியம்பாடி உழவர் சந்தையில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அதிரடியாக தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டுவர கூடிய காய்கறிகள் முறையாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனை செய்துவிட்டு குப்பைகள் கொட்டாமல் பார்த்துகொள்ள வேண்டும் என நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் உத்தரவு மீறி காய்கறிகள் மற்றும் குப்பைகளை அருகிலுள்ள கிளை ஆறுகளில் கொடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு ரூ 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஆற்றுப்படுகையில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டு குப்பைகள கொட்டும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் சுசில் தாமஸ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai as the future