வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்
X

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு

நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் பாம்பு பிடிக்கும் இளைஞர் நீண்ட நேரமாகப் போராடி பிடித்தார்

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நாகப்பாம்பு நுழைந்ததால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்தது. இதனை கண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்குள்ள அறையில் நுழைய முயன்ற நாகபாம்பினை பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை அழைத்து பிடிக்க முயன்றபோது நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் அந்த இளைஞர் நீண்ட நேரமாக போராடி பிடித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நல்ல பாம்பால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!