குப்பை வண்டி நிறுத்துமிடமாக மாறிய வாணியம்பாடி சிறுவர் பூங்கா

குப்பை வண்டி நிறுத்துமிடமாக மாறிய வாணியம்பாடி சிறுவர் பூங்கா
X

பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதான வாகனங்கள்

வாணியம்பாடி சிறுவர் பூங்காவில் குப்பை வண்டிகள் ஆக்கிரமிப்பு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாணியம்பாடி நகராட்சி சார்பில் 2008 - 2009 ஆம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் குழந்தைகள் பெரியவர்கள் என மாலை நேரத்தில் ஓய்வு எடுக்க வருகின்றனர். சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இங்கு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள பேட்டரி வண்டிகள் மற்றும் பழுதான வண்டிகளை சிறுவர் பூங்கா முழுவதும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் விளையாட முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

உடனடியாக பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளவும் சிறுவர்கள் விளையாடுவதற்கான இடத்தை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்திக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil