மத்திய அரசு தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை தரவில்லை: துரைமுருகன்

மத்திய அரசு  தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை தரவில்லை:  துரைமுருகன்
X

வாணியம்பாடி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் 

பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட மத்திய அரசு தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை 1 ரூபாய் கூட தரவில்லை என துரைமுருகன் கூறினார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் துரைமுருகன் வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். டெல்லி சென்று நானும் முதல்வர் பிரதமரிடம் சென்று மத்திய அரசு தரவேண்டிய பாக்கி தொகைகள் குறித்து விரிவாக முதல்வர் எடுத்துரைத்தார். உடனடியாக பிரதமர் சொன்னார் ஒரு மாதத்திற்குள் அனைத்து பணத்தையும் கொடுக்கப்படும் என்று சொன்னார். ஆனால் தற்போது வரை 1 நயா பைசா கூட தரவில்லை

மேலும் வாணியம்பாடியில் நல்ல கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்தால் நல்லது நடக்கும் இல்லையெனில் 5 ஆண்டு காலம் வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக பேசினார்

நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் தேவராஜ், வில்வநாதன் மற்றும் நகர பொறுப்பாளர் சாரதிகுமார், மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil