வாணியம்பாடியில் செல்போன் வழிப்பறி, 2 இளைஞர்கள் கைது

வாணியம்பாடியில் செல்போன் வழிப்பறி, 2 இளைஞர்கள் கைது
X

செல்போன் வழிபறி  பைல்படம்

வாணியம்பாடியில் செல்போன் வழிப்பறி செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து கொண்டு கச்சேரி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு (HDFC) சென்றுள்ளார்.

செல்போனில் பேசியபடி வங்கி வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் செல்போனை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்,

உடனடியாக அஜய் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து செல்போன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த 2 இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்..

விசாரணையில் வாணியம்பாடி நடுபட்டரை பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த பிரேம் சுந்தர் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் இந்த பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் திருடிய செல்போன்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் செல்போன் திருடுவதற்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai and future cities