ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட 3 அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது
ஊரடங்கின்போது ரத்து செய்யப்பட்ட பேருந்துகளை ஆலங்காயம் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வெள்ளக்குட்டை பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயங்கி வந்தன. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஆம்பூர்- வெள்ளக்குட்டை, ஆலங்காயம் - ஓசூர், திருப்பத்தூர் - சென்னை ( வழி ஆலங்காயம் வெள்ளகுட்டை) ஆகிய 3 பேருந்துகளை ஆலங்காயம் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu