கொத்த கோட்டை கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறி பாய்ந்த காளைகள்
எருது விடும் போட்டியை கண்டுகளித்த எம்எல்ஏக்கள்
வாணியம்பாடி அருகே கொத்த கோட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற 67 ஆம் ஆண்டு எருது விடும் விழாவில் காளைகள் சீறி பாய்ந்தன. 110 விதி அமல் படுத்தி நடைபெற்ற எருது விடும் விழா சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 67 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 150 காளைகள் போட்டியில் பங்கேற்க வைத்தனர்.
குறிப்பிட்ட வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.60 ஆயிரம்,இரண்டாம் பரிசு ரூ.50ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் என 30 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான வருவாய் துறையினர், சுமார் 100 போலிசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த எருது விடும் விழாவில் அரசு விதி மீறல்களை தவிர்க்க மனித உயிர்களுக்கு பாதுகாப்பு,காளைகளை துன்புறுத்தாமல், அச்சுறுத்தல் இல்லாமல் கொரோனா காலத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று விழாக்குழுவினர் இடம் கையொப்பம் பெற்று 110 விதி அமல் படுத்தி விழா நடைபெற்றது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu