வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
X

திருடு போன கோவில்.


வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளைபடித்த சம்பவத்தில் வாணியம்பாடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை வாணியம்பாடி நகர போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

உடைக்கப்பட்ட உண்டியல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் உள்ள அழகு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த காட்சி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதேபோல் வாணியம்பாடி இராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாரத கோவில் மற்றும் முருகர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோ மற்றும் உண்டியலை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!