பாலாற்றில் நீரில் முழுகி மாயமான இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு.

பாலாற்றில் நீரில் முழுகி மாயமான இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு.
X

பாலாற்று வெள்ளத்தில் மூழ்கியவர்

வாணியம்பாடி அருகே புல்லூர் பாலாற்றில் நீரில் முழுகி மாயமான இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் புல்லூர் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பு அணை நிரம்பி கடந்த ஒரு மாதமாக வெள்ளநீர் பாலாற்றில் கலந்து பெரு வெள்ளமாக ஓடுகிறது

இந்த நிலையில் வாணியம்பாடி சி.எல்.சாலை பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஷாபுதீன்( வயது 20), அவருடைய நண்பர்கள் கடந்த 6ம் தேதி தடுப்பணை பாலாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஷாபுதீன் நீரில் மூழ்கி மாயமானார்.

சம்பவம் குறித்து தமிழக ஆந்திரா மாநில போலீசார் மாயமான இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை ராமநாயக்கன்பேட்டை பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலின் பேரில் அம்பலூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அம்பலூர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்