வாணியம்பாடி அருகே ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
X

மீட்புப்பணியின்போது எம்எல்ஏ வில்வநாதன் 

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் உடலை 22 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவடச்சேரி பகுதியை சேர்ந்தவர் குமாரி, இவருடைய பேரன் அஜீத் (21) என்பவர் கட்டிட தொழிலாளி. இவர் சிறுவயதிலேயே தனது தாயை இழந்த நிலையில் பாட்டி குமாரியுடன் வசித்து வந்துள்ளார் .

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அருகிலுள்ள மேல்குப்பம் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய அஜித் தண்ணீரில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து தனது கையை அசைத்தபோது அங்கு கரையோரம் மீன்பிடித்து கொண்டிருந்த சில இளைஞர்கள் கண்டு அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு மீட்க முடியாமல் நேற்று ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் நேற்று இரவு வரை மீட்பு பாணியில் ஈடுபட்டு மீட்க முடியாமல் முயற்சியை கைவிட்டனர்.

பின்னர் இன்று காலை முதல் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறையினர் வரவழைக்கப்பட்டு ரப்பர் படகு மூலம் சுமார் 30 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவருடைய குடும்பத்தினர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அங்கு மீட்பு பணியை தீவிர படுத்தும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியை தொடங்கினர் அதன் பின்னர் இளைஞனின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
future of ai in retail