வாணியம்பாடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடத்தியவர்கள் கைது

வாணியம்பாடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடத்தியவர்கள் கைது
X

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்

வாணியம்பாடி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த காரிலிருந்து 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல். கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெங்களூரில் இருந்து காரில் குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வாணியம்பாடி கிராமிய நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசார் இருப்பதைக் கண்டு அங்குள்ள தடுப்பு வேலிகளை உடைத்து நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துரத்திச் சென்று காரை பிடிக்க முயன்றனர் அப்பொழுது கடத்தல்காரர்களின் கார் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி, அதனைத் தொடர்ந்து போலீசார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது

காரில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து வேலூருக்கு கார் மூலம் கடத்தி வரப்பட்ட 18 மூட்டைகளில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காட்பாடி, கள்புதூர் பகுதியை சேர்ந்த பாபுலால், மற்றும் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!