போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
X

அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போக்சோ விழிப்புணர்வு கூட்டம் 

வாணியம்பாடி அருகே பெண்களுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போக்சோ சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.

அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய ஆய்வாளர் ஜெயலட்சுமி பெண் குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தேவையற்றவர்கள் பேசினாலோ அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்கிக் கொடுத்து ஆசைவார்த்தை கூறினாலும் அதை நம்பக்கூடாது அதேபோன்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன அதனை தடுக்க பள்ளி மாணவிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துக்கூறி ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil