வாணியம்பாடியில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

வாணியம்பாடியில்  அதிமுக,  திமுகவினரிடையே வாக்குவாதம்
X
வாணியம்பாடியில் கொரோனா நிதியை வழங்க சென்ற அதிமுக எம்எல்ஏவை திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்; பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திம்மாம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிதியுதவி 2000 ரூபாயை வழங்குவதற்காக சென்ற வாணியம்பாடி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் செந்தில்குமாரை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிர்வாகி உங்கள் ஆட்சியில் நீங்கள் வழங்கினீர்கள் இது எங்கள் ஆட்சி நாங்கள்தான் வழங்குவோம் என செந்தில்குமார் இடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் இது ஸ்டாலின் பணம் அல்ல இது பொது மக்கள் வரிப்பணம் என்று சொன்னதால் ஒருவருக்கு ஒருவர் இடையே வாக்குவாதம் முற்றி சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது திமுகவினர் இடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நான் மக்கள் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

பின்னர் அதிகாரிகள் இரு கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி, பின்னர் கொரோனா நிதியை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்

Tags

Next Story