வாணியம்பாடி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

வாணியம்பாடி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலம்.

வாணியம்பாடி நகராட்சி மற்றும் வாணியம்பாடி சார் நிலைக் கருவூலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2012 முதல் 2014 வரை ஊழியர்களின் வைப்பு நிதியில் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.

புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 2014 ஆம் ஆண்டு 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒப்புகொண்டனர். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய உதவித் தொகை,நகராட்சி நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் பணத்தையும் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, 3பேரையும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். அதைதொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அவர்களுடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் இன்று லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் விஜய் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாணியம்பாடி நகராட்சியில் விசாரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்நிலைக்கருவூலத்திற்கு சென்று வாணியம்பாடி நகராட்சி சம்பந்தமான ஆவணங்களைக் கேட்டு விசாரணை செய்தனர்.

Tags

Next Story