தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
X

அம்பலூர் தரைப்பாலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெறுகிறது

தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வாணியம்பாடி பாலாற்று வெள்ளப்பெருக்கில் அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பாலாற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய பொது மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வரக்கூடிய தண்ணீர் பாலாற்றில் ஒன்றாக இணைந்து தற்பொழுது திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக தண்ணீரானது செல்கிறது

மேலும் இந்த மழையின் காரணமாக அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது இதனால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பலூர் தரைப்பாலத்தில் கண்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மேற்பார்வையில் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!