உள்ளாட்சித்தேர்தல்: ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்கள் விருப்ப மனு

உள்ளாட்சித்தேர்தல்: ஆலங்காயம் ஒன்றியத்தில்  திமுக வேட்பாளர்கள் விருப்ப மனு
X

திமுகவினரிடம் விருப்பமனுக்களை பெற்ற எம்எல்ஏ தேவராஜி

ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை எம்எல்ஏ தேவராஜ் பெற்றுக்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி அவர்கள் விருப்ப மனுக்களை பெற்றார்.

இதில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். முனிவேல், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஞானவேலன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.வி.கிரிராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!