வாணியம்பாடி  ஐயப்பன் கோவிலில் ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம்

வாணியம்பாடி  ஐயப்பன் கோவிலில் ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம்
X

ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் ஐயப்பன்

வாணியம்பாடி  ஐயப்பன் கோவிலில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளில் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஐயப்பன் சன்னதி இந்த சன்னிதானத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மாலையணிந்து சபரிமலை யாத்திரைக்கு செல்வது வழக்கம். மேலும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினந்தோறும் வந்து இங்கு இருமுடி கட்டிக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும் நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இங்கு உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு ரூபாய் தாளில் இருந்து 2000 தாள் வரை உள்ள நோட்டுகளில் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அலங்காரத்தில் காண ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செய்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்