விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் பார்வையாளர் 

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கவாணியம்பாடியில் தேர்தல் பாார்வையாளர் உத்தரவு

தமிழக முழுவதும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து வேட்புமனு செய்யப்படும் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு பணிகள், பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகள் ஆகியவற்றைச் சரிபார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் அறைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இருந்ததால் அவர்களை விசாரித்து வேட்பாளர்கள் உடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்தல் விதிமுறைகள் மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story
the future of ai in healthcare