வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை

வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை
X
வாணியம்பாடியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு நாள் நோம்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் அல் கமர் எஜிகேஷனல் அண்டு சாரிடெபில் டிரஸ்ட் இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களாக பாலஸ்தீன் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிர் இழுந்து வருகின்றனர்.

மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் குண்டு மழையால் சேதம் அடைந்து அப்பாவி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். இஸ்ரேல் நாடு பாலஸ்தீன் நாட்டின் மீது நடத்தி வரும் போர் நிறுத்தம் செய்து அங்கே மீண்டும் அமைதியான சூழல் நிலவ வேண்டியும், பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக அல் கமர் அகாடமி மாணவர்கள் சார்பில் ஒரு நாள் நோம்பு வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மேலும் அல் கமர் எஜிகேஷனல் அண்டு சாரிடெபில் டிரஸ்ட் நடத்த ஏதுவாக ஆதரவளிக்கும் நண்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர்.

இதில் ஹஸ்ரத் மௌலானா முஃப்தி அதீக்குர் ரஹமான, அல் கமர் நிறுவனரும் மற்றும் தலைவருமான எம்.ஹபீஸ் காரி ஷஹாபுதீன், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஜாப்ராபாத் பஞ்சாயத்து கவுன்சிலர் சையத் சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா