வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
X

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முருகேசன்.

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 50) . இவர், தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வீட்டிற்கு நைசாக பேசி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமி நடந்த விஷயத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீசார் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முதியவர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு